பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச யோகா நாளில் பங்கேற்றுவிட்டு, கொல்கத்தாவிலிருந்து தில்லி விமான நிலையம் வந்த நிலையில், அவர் 45 நிமிடங்கள் வெளியே செல்லாமல் அங்கேயே காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொல்கத்தாவிலிருந்து தில்லி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து பிரதமர் அலுவலகம் அல்லது பிரதமல் இல்லம் திரும்பும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு அதனால் நீட் மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படக்கூடாது என்று கருதினார்.
கொல்கத்தாவிலிருந்து வந்த விமானம் தில்லியில் பிற்பகல் 1.15 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், மதியம் 1.30 மணி வரை நீட் தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவகாசம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்க இருந்தது.
எனவே, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களால் எங்கேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், நீட் தேர்வு மையங்களின் கதவுகள் 2 மணிக்கு மூடப்பட்டதை உறுதி செய்துகொண்ட பிறகே, பிரதமர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியைப் பொருத்தவரை பதவி என்பது பொறுப்பு. நீட் மாணவர்களுக்காக, விமான நிலையத்தில் காத்திருந்தது என்பது, குடிமக்களே முக்கியம் என்பதை காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Regarding Prime Minister Modi waiting at the airport to ensure NEET students faced no inconvenience...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!

பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. ‘மாபெரும் ஆளுமையாக திகழ்ந்ததாகப் புகழாரம்’!!

நேரு சாதனை முறியடிப்பு! வரலாற்றில் நீண்ட கால பிரதமரானார் மோடி!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




