கடந்த 60 வருடங்களாக பேசி பேசியே நாட்டைக் கெடுத்துவிட்டதாகவும் முதல்வர் விஜய்யும் அதைச் செய்ய வேண்டுமா? என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அவருடைய ஸ்பெஷல் பிறந்த நாள். இத்தனை ஆண்டுகளாக நடிகராக இருந்த அவர், இன்று அனைவரின் ஆதரவாலும் முதல்வர் ஆகியிருக்கிறார். நிறைய கனவுகளுடன் இருக்கிறார், நிச்சயமாக நிறைவேற்றுவார். குறிப்பாக ஏழை மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்வார். அதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கடந்த 60 வருடங்களாக பேசி பேசியே நாட்டைக் கெடுத்துவிட்டனர். இவரும் அதைச் செய்ய வேண்டுமா? பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? செயல்படுவதுதானே முக்கியம். முதல்வர் செயல்படுகிறார். அப்புறம் எதற்காக பேச வேண்டும்?
சும்மா பேசி பேசி எதுவும் செய்யாமல் இருப்பதைவிட பேசாமல் செயல்படுத்துவது நல்லது.
விசிக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்களுக்கு முந்தைய ஆண்ட அரசுகள், இதுவரை அதிகாரப் பகிர்வு கொடுத்தார்களா? ஆனால் தவெக அனைவரையும் அரவணைத்து அதிகாரமும் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதிகாரம் இருந்தால்தானே அவர்கள் மக்களுக்குச் செய்ய முடியும்" என்று தெரிவித்தார்.
Summary
S.A. Chandrashekhar responds to criticism that CM Vijay does not speak or meet with the press
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும்
எல்லா தந்தைக்கும் இது கிடைப்பதில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க பேச்சு
எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி : எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய் வெற்றிக்காக திருத்தணி முருகன் கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் தியானம்!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



