மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தமிழ்நாடு

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

பிரதமர் மோடி - முதல்வர் விஜய்(கோப்புப்படம்)

Updated On :22 ஜூன் 2026, 10:58 pm IST
4:31 am, 22 ஜூன் 2026

முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

4:57 am, 22 ஜூன் 2026

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

5:10 am, 22 ஜூன் 2026

அமோனியா வாயு கசிவு விபத்து: 3 பேர் கைது

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5:12 am, 22 ஜூன் 2026

அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

5:13 am, 22 ஜூன் 2026

முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5:33 am, 22 ஜூன் 2026

பிலிப்பின்ஸில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் பலி

பிலிப்பின்ஸில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5:35 am, 22 ஜூன் 2026

பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!

தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

5:36 am, 22 ஜூன் 2026

முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!

திருவள்ளூர் ஆலை வாயு கசிவு விபத்து குறித்து முதல்வர் விஜய் மிகுந்த வேதனை அடைந்ததாக பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.

5:37 am, 22 ஜூன் 2026

மேக்கேதாட்டு தீர்மானத்தில் திருத்தம்: எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு! அதிமுகவினர் வெளிநடப்பு!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

6:16 am, 22 ஜூன் 2026

பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!

6:16 am, 22 ஜூன் 2026

மேக்கேதாட்டு அணை தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது ஏன்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

7:01 am, 22 ஜூன் 2026

ரூ. 4.68 லட்சம் இழப்பீடு

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை டெலிவரி செய்த அமேசான் மற்றும் விற்பனையாளருக்கு ரூ. 4.68 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7:03 am, 22 ஜூன் 2026

பாகிஸ்தான் மிரட்டல்

பாகிஸ்தானின் நீர் பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தல் விளைவித்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

7:07 am, 22 ஜூன் 2026

முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர்

முதல்வர் விஜய் பேசுவதில்லை, செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனத்திற்கு அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பதில்...

8:16 am, 22 ஜூன் 2026

திருப்பரங்குன்றம் வழக்கு - அரசு விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

8:29 am, 22 ஜூன் 2026

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

9:49 am, 22 ஜூன் 2026

'நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? உதயநிதி

9:50 am, 22 ஜூன் 2026

முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர்

9:51 am, 22 ஜூன் 2026

மின் வெட்டு குறித்து உதயநிதி பேச்சு 

தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டு பிரச்னையை விமர்சித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார்.

10:27 am, 22 ஜூன் 2026

உதவாக்கரைகள்!

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பிய தொண்டர்களை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்தார்.

1:39 pm, 22 ஜூன் 2026

நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் ரித்திகா தமிழ்ச்செல்வி!

சின்ன திரை நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோழிகளை சந்தித்துப் பேசியுள்ளார். நடிகை பவித்ரா, காயத்ரி ஆகியோரை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1:40 pm, 22 ஜூன் 2026

சின்ன மருமகள் தொடரின் இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர்கள்!

சின்ன மருமகள் தொடரின் இயக்குநர் பிறந்தநாளையொட்டி தொடரின் குழுவினர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நடுவே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் வெட்டி இயக்குநர் மனோஜ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

1:41 pm, 22 ஜூன் 2026

இன்னைக்கும் கரண்ட் வராதா? சட்டப்பேரவை நிகழ்வைக் குறிப்பிட்டு கேள்வி?

அப்படியென்றால் இன்றைக்கும் மின்சாரம் கிடைக்காதா? என சட்டப்பேரவை நிகழ்வைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1:41 pm, 22 ஜூன் 2026

அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிந்து உயிரிழந்தோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

1:41 pm, 22 ஜூன் 2026

விஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று (ஜூன் 22) பிறந்த குழந்தைகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தங்க மோதிரம் வழங்கினார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கினார்.

1:51 pm, 22 ஜூன் 2026

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1:51 pm, 22 ஜூன் 2026

இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் எத்தனை போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன? இன்னும் எத்தனை நீதிமன்றங்கள் தேவைப்படும்? போக்சோ நீதிமன்றங்களின் செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1:51 pm, 22 ஜூன் 2026

பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படவுள்ளன.

5:28 pm, 22 ஜூன் 2026

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

5:28 pm, 22 ஜூன் 2026

முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 22) அறிவித்தது.

தவெக தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை மேற்கொண்ட ரூட் அமைப்பின் நிறுவனரான ஜெகதீஷ் பழனிசாமியை, முதல்வரின் தனிச் செயலராக, மே 12 ஆம் தேதி நியமனம் செய்தது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.