முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

இந்தியாவுக்கு எதிராகப் போர்! பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் போர் மிரட்டல் விடுத்திருப்பது பற்றி...

News image

கவாஜா ஆசிஃப் - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 11:53 am IST

பாகிஸ்தானின் நீர் பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தல் விளைவித்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை, 1960 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மேற்கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தையும், அதன் கட்டமைப்பையும் பாகிஸ்தான் ஒழிக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாநிலங்களின் விவசாயமும் குடிநீர்த் தேவையும் சிந்து நதி நீரையே நம்பி இருக்கிறது. நீண்ட நாள் சிந்து நதி நீர் நிறுத்திவைக்கப்பட்டால், அம்மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில், சமீபத்தில் இந்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் பேசிய காணொலி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி, வரும் ஜூன் 2028-க்குள் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஏஆர்ஒய் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ”தண்ணீர் என்பது நமது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதி. எப்போது அதற்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணருகிறோமோ, அந்த நொடியே இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவோம். தண்ணீரை இந்தியா ஆயுதமாக பயன்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி, சுமார் 80 சதவிகித தண்ணீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால், அந்நாட்டின் விவசாயம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் இது மிக முக்கியமானதாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாகக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலையீட்டை கடந்த வாரம் பாகிஸ்தான் கோரியது குறிப்பிடத்தக்கது.

Summary

Indus Waters Treaty - Pakistan threatens war against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.