ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதி, அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதாத நிலையால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயாவில், செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன.
அனைத்துப் போட்டிகளும் நகோயாவில் உள்ள பலோமா மிசுஹோ கிரிக்கெட் திடலில் டி20 ஓவர்கள் போட்டியாக நடைபெறுகிறது.
இந்த நிலையில், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாக்-அவுட் சுற்றான காலிறுதி மற்றும் அரையிறுதியில் மோதாத நிலை உருவாகியிருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
வழக்கமான ஐசிசி தொடர்கள் போன்று லீக் சுற்றில் மோதுவது போல் அல்லாமல், பாகிஸ்தான் அணி காலிறுதியின் முதல் சுற்றிலும், இந்திய அணி காலிறுதியின் இரண்டாவது சுற்றிலும் விளையாடுகின்றன. இதனால், இரண்டு அணிகளும் காலிறுதியில் விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
அதேபோன்று, முதல் அரையிறுதியில் முதல் மற்றும் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மோதுகின்றன (Winner of Quarter-final 1 vs Winner of Quarter-final 3).
இரண்டாவது அரையிறுதியில், இரண்டாவது மற்றும் நான்காவது காலிறுதியில் வெற்றி பெற்ற அணிகள் மோதுகின்றன (Winner of Quarter-final 2 vs Winner of Quarter-final 4).
அரையிறுதியில் இரண்டு அணிகளும் தோற்றால், வெண்கலப் பதக்கத்திற்கான தகுதிச் சுற்றில் அவர்கள் நேருக்கு நேர் மோதக்கூடும் அல்லது தங்கம் / வெள்ளிப்பதக்கத்துக்கான இறுதியில் அவர்கள் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
India and Pakistan have been kept on opposite sides of the draw for the Asian Games 2026 cricket competitions, ruling out multiple meetings between the arch-rivals. The two teams can face each other only in the gold-medal match or bronze-medal play-off in both the men's and women's tournaments.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு: மீராபாய் சானு

23.7.1976: இந்தியா - பாக். இடையே முதல் ரயில் சென்றது - 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து ஆரம்பம்

ஃபிபா: தரவரிசையில் Top 4-ல் இருக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி | FIFA | FIFA World Cup |

முடங்காமல் முயன்றால் உலகம் வசப்படும்! பாரா டேக்வாண்டோ ஆசிய சாதனையாளர் பிளஸ்ஸிங் சஜு!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



