திருவள்ளூர் ஆலை வாயு கசிவு விபத்து குறித்து முதல்வர் விஜய் மிகுந்த வேதனை அடைந்ததாக பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18, வியாழக்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவினால் 5 பேர் பலியானது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
110 விதியின் கீழ் அவர் விளக்கமளிக்கையில்,
"திருவள்ளூர் அமோனியா வாயு கசிவினால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அப்போது அமைச்சரின் விளக்கத்திற்கு முன் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Summary
Chief Minister was deeply distressed: Minister explains the gas leak accident in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

அமோனியா வாயு கசிவு விபத்து: 3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



