பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அமோனியா வாயு கசிவு விபத்து: 3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக 3 பேர் கைது - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 9:18 am IST

சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபோ் கிராமத்தில் தனியாா் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை எதிா்பாராதவிதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபா்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனா். அதில் துரதிருஷ்டவசமாக 2 பெண்கள் பலியாகினர்.

பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இதனிடையே, அமோனியா வாயு கசிவு பதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பேர் கைது

இந்த நிலையில், தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப்ஜெகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Summary

Regarding the arrest of three individuals in connection with the ammonia gas leak incident...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.