சின்ன திரை நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி, நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோழிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.
நடிகை பவித்ரா, காயத்ரி ஆகியோரை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.
இத்தொடரில் கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, திருமகள் என அடுத்தடுத்த தொடர்களில் நடித்து கவனம் பெற்றார். இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி தொடரில் அம்ரிதா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

ரித்திகா தமிழ்ச்செல்வி - இன்ஸ்டாகிராம்
பாக்கியலட்சுமி தொடரில் ரித்திகாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.
திருமணத்துக்கு பிறகு குழந்தையுடன் அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிடும் ரித்திகா, பொதுவெளியில் அதிகம் காணப்படாதவராகவே இருந்து வந்துள்ளார்.

குழந்தை, கணவருடன் ரித்திகா - இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இன்று தனது சக நடிகைகளும் தோழிகளுமான பவித்ரா ஜனனி, காயத்ரி ஆகிய இருவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். இவர்கள் மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டர்.
இவர்கள் மூவரையும் தற்போது சின்ன திரையில் அதிகம் பார்க்க முடியாதது வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் புதிய தொடரில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Serial actress Rithika tamil selvi meet co actress Pavithra janani Gayathri viral photo
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












