தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வெனிசுவேலா நிலநடுக்கம்! 6 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை!

வெனிசுவேலாவில் இடிபாடுகளில் இருந்து 6 நாள்களுக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து...

Venezuela earthquakes

வெனிசுவேலாவில் 6 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை... - கோப்புப் படம் | AP

Published On :1 ஜூலை 2026, 6:07 pm IST

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 6 நாள்களுக்குப் பிறகு 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலா நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இந்தப் பேரிடரால், வெனிசுவேலா நாட்டில் இதுவரை 1,943 பேர் பலியானதாகவும், 10,000-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் 6 ஆவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நிலநடுக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாநிலத்தில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவனான க்லீபர் மோரான் சுமார் 6 நாள்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 1) ஜோர்டானிய மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தலைநகர் கராகஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள இந்தியா, கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

a 3-year-old child was rescued alive from the rubble left by the earthquake in Venezuela after six days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.