கத்தார் நாட்டில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையாகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில், அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே இன்று (ஜூலை 1) மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பின் பிரிநிதிகளும் நேரடியாக ஒருவரையொருவர் சந்திக்க மாட்டார்கள் எனவும், கத்தார் அரசின் மத்தியஸ்தர்களின் முன்னிலையில் பேச்சு நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தோஹா வந்தடைந்ததாகக் கூறப்பட்டது.
ஏற்கெனவே, அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து ஈரானிய பிரதிநிதிகள் வெளியேறினர்.
இத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில நிபந்தனைகளாவது அமல்படுத்தப்படும் வரையில் அமெரிக்கா உடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என ஈரானிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that indirect talks between the United States and Iran are taking place in Qatar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!
கத்தாரில் நாளை ஈரான் - அமெரிக்கா பேச்சு! டிரம்ப் தகவல்

அமெரிக்கா - ஈரான் மோதல்! பாக். தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு சௌதி அரேபியா வலியுறுத்தல்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் கண்டனம்!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS



