விஜய் தொலைக்காட்சியில் தொடர்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தவகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, குடும்ப சூழல் காரணமாக பழமைவாத பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடருக்கு பலமாக அமைந்துள்ளது.
எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனம் சார்பில் குஷ்மாவதி தயாரித்துவரும் இத்தொடரை இயக்குநர் எம். மனோஜ் குமார் இயக்குகிறார். இவர் மெளன ராகம், பொன்னி, தனம் உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியுள்ளார்.
இதனிடையே இவரின் பிறந்தநாளையொட்டி தொடரின் குழுவினர் இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நடுவே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் வெட்டி இயக்குநர் மனோஜ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இயக்குநரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் - இன்ஸ்டாகிராம்
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Vijay TVs Chinna Marumagal serial director Manoj kumar got surprise by actress swetha and others
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












