நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

ரோஜா பட நடிகையின் சின்ன சின்ன ஆசை: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சின்ன சின்ன ஆசை படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

சின்ன சின்ன ஆசை படத்தின் காட்சி. - படம்: எக்ஸ்

Updated On :22 ஜூலை 2026, 5:53 pm IST

மலையாள மொழிப்படமான சின்ன சின்ன ஆசை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை' .

என்டே நாராயணிக்கு என்ற குறும்படத்தை இயக்கிய வர்ஷா வாசுதேவ், இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

வாரணசியில் ஒரு நாளைக் கழிக்கும் இரு கதாபாத்திரங்களை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக சந்திக்கும் இருவருக்கு இடையே உருவாகும் அன்பையும், வாழ்க்கையையும் பற்றிய புரிதலையும் வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் பெயர், மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் 1992-ல் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலைக் குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை பாபுஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சின்ன சின்ன ஆசை திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Summary

The OTT release date for the Malayalam film Chinna Chinna Aasai has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.