தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பிக் பாஸ் சிபி நடித்த ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

News image

ஈகோ ராமன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :21 ஜூலை 2026, 2:55 pm IST

பிக் பாஸ் பிரபலம் சிபி புவனச்சந்திரன் நடித்த, ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈகோ ராமன்.

போட்டித் தேர்வுக்கு படிக்கும் அறிவு (சிபி) என்ற இளைஞனுக்கும், பள்ளி ஆசிரியரான ராமனுக்கும் (ரோபோ சங்கர்) இடையே நடக்கும் ஈகோ மோதலே இந்தத் திரைப்படத்தின் கதை.

நகைச்சுவை நடிகராகப் பார்த்த நடிகர் ரோபோ சங்கர், இந்தப் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ரெய்மன் ராட்ரிக்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ஈகோ ராமன் திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Ego Raman, starring Bigg Boss fame Cibi Chandran, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.