மேக்கேதாட்டு தீர்மானத்தில் திருத்தம்: எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு! அதிமுகவினர் வெளிநடப்பு!

மேக்கேதாட்டு அணை தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு...

Amendment to Mekedatu resolution: AIADMK members stage a walkout

பேரவைத் தலைவர் - TN Assembly

Published On :

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் உரை மீதான 2 ஆவது நாள் விவாதத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேக்கேதாட்டு அணை தீர்மானத்தில் 'புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' எனத் திருத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய நடுவர் மன்றம் என்ற கோரிக்கையால் பாதிப்பு ஏற்படலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட், பாமக, உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அப்போது, மேக்கேதாட்டு திருத்தப்பட்ட தீர்மானத்தில் தவறு உள்ளதாகவும் அது குறித்து உரிமை மீறல் பிரச்னையைப் பேச அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றியபிறகு மேக்கேதாட்டு குறித்து பேச யாருக்கும் அனுமதியில்லை என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட மேக்கேதாட்டு தீர்மானம் குறித்து அவையில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவை விதிகளுக்கு உட்பட்டுதான் நான் நடக்கிறேன் என பேரவைத் தலைவர் விளக்கம் அளித்தார்.

Summary

Amendment to Mekedatu resolution: AIADMK members stage a walkout

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.