டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாகர்கோவில் வந்துள்ளது பற்றி...

Prime Minister Modi Arrives in Nagercoil for election campaign

கோப்புப் படம் - ENS

Published On :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று(புதன்கிழமை) மாலை வருகை தந்துள்ளார்.

தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார்.

தொடர்ந்து, வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணியாகச் சென்று கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

இப்பேரணியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.

பிரதமர் வருகையையொட்டி நாகா்கோவில் நகரம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Prime Minister Modi Arrives in Nagercoil for election campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.