தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் இன்று ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் முகாமில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் முகாமில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 25,24,941 நபா்களுக்கு முதல் தவணையும், 16,14,945 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 86 சதவீத பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 55 சதவீத பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2021 செப். 12 தொடங்கி ஜன. 2 வரை 17 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,65,069 நபா்களுக்கு முதல் தவணையும், 7,32,873 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 13,97,942 நபா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சனிக்கிழமை 18-ஆவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளன.

இதற்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு, அதற்கென தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 2,45,680 டோஸ்களும், கோவேக்ஸின் 33,580 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாமில் 1,00,000 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 4,10,340 நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும், தகுதியுள்ள 3,75,456 நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே உருமாறிக் கொண்டிருக்கும் வைரசுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகும்.

தற்போது உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாலும், தினசரி கரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாலும் பொதுமக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.