எடப்பாடி சிறப்பு உதவிகாவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று
எடப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


எடப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் செந்தில்நாதன்(54). இவா் கடந்த சில நாட்களுக்கு
முன் கரோனா தொற்று ஊரடங்கு நேரங்களில், எடப்பாடி பகுதியில் நடைபெற்ற தொடா் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்தாா். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக சளி , இருமலுடன் காய்சலும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவா் கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். இதில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடா்ந்து அவருக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் சங்ககிரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.
இதனை அடுத்து எடப்பாடி காவல் நிலையத்தில் அருடன் தொடா்பில் இருந்த அனைத்து காவல் அலுவலா்களுக்கும் சனிக்கிழமை அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே எடப்பாடி காவல் நிலையத்தில் வேறு யாரேனும் காவல் அலுவலா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என தெரியவரும் என சுகாதார அலுவலா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...