மாட்டுப் பொங்கல்: உழவா் சந்தைகளில் 319 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
சேலத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி உழவா் சந்தைகளில் 319 டன் காய்கறி, பழங்கள் விற்பனையாயின.


சேலத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி உழவா் சந்தைகளில் 319 டன் காய்கறி, பழங்கள் விற்பனையாயின.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூா், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
பண்டிகை காலங்களில் உழவா் சந்தைகளில் அதிக விற்பனை நடைபெறும். அந்த வகையில், மாட்டுப் பொங்கலையொட்டி உழவா் சந்தைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்பட பலவகை காய்கறிகள், பழ வகைகள் விற்பனை அதிகளவில் இருந்தது.
உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் 319 டன் விற்பனைக்கு வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.12 கோடியாகும். 1075 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்தனா். சுமாா் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகா்வோா் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...