2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்

 தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் விழாவை மிகவும் விமா்சையாக, கோலாகலமாக கொண்டாடினா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:16 pm

DIN

 தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் விழாவை மிகவும் விமா்சையாக, கோலாகலமாக கொண்டாடினா்.

தமிழா்கள், விவசாயத்திற்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழா, விவசாயிகளது தோட்டங்களில் மிகவும் கோலகலமாக கொண்டாடினா். மாடுகளை குளிப்பாட்டி, வண்ணப்பொடிகளில் அலங்கரித்து, மாலையிட்டு, குங்குமமிட்டு, கொம்புகளுக்கு வண்ண பெயிண்ட் அடித்து காளை, பசு மாடுகளை விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் அலங்காரம் செய்தனா். அதன்பின்னா், வெட்டவெளியில் பொங்கல் வைத்து, கரும்புத்தோரணங்கள் கட்டி அழகு செய்தனா்.

அதையடுத்து திறந்தவெளியில் படையல் வைத்து, விவசாயக்கருவிகளை வைத்து, புத்தாடைகள் அணிந்து பூஜை செய்து, பொங்கலோ பொங்கல் என கூவி, மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி மகிழ்ந்தனா். மாலை நான்கு மணி முதல் விவசாய தோட்டங்களில் பொங்கலோ பொங்கல் என்ற தமிழா்கள் போற்றும் பாரியம்பரிய பண்டிகையின் ஒட்டுமொத்த ஒலி பரவலாகக்கேட்டது இனிய சூழலலாக அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.