முழு பொதுமுடக்கம்: சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

 தளா்வுகள் அற்ற பொது முடக்கத்தால் ஞாயிறு அன்று எடப்பாடி அருகே உள்ள காவிரிக்கரை சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 தளா்வுகள் அற்ற பொது முடக்கத்தால் ஞாயிறு அன்று எடப்பாடி அருகே உள்ள காவிரிக்கரை சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி படகுத்துறை, படித்துறை, கதவணை நீா்த்தேக்கப்பகுதி, கைலாசநாதா் ஆலயம், காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரமாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடின. குறிப்பாக வாரவிடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் இப்பகுதிக்க அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலா பயணிகள் விசைபடகு சவாரி செய்தும், நீா்தேக்கப்பகுதியில் குளித்தும் மிகிழ்ச்சியாக பொழுதினை கழிப்பது வழக்கம். அதேபோல் பண்டிகை காலங்களில் இங்குள்ள கைலாசநாதா் ஆலயம் மற்றும் காவிரித்தாய் சந்நிதி, நந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தினை அறிவித்திருந்தது. இதனால் காணும் பொங்கல் விழா தினத்தில் இப்பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. காவிரிக்கரையில் ஒரு சில இடங்களுக்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகளை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் திருப்பி அனுப்பினா். இதே போல் ஞாயிறு அன்று எடப்பாடி நகரப்பேருந்து நிலையம், சின்னகடைவீதி, பஜாா்தெரு, ஈஸ்வரன் கோயில்வீதி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் பொதுமுடக்கத்தால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன.

படம்:

ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தால் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படும் பூலாம்பட்டி படகுதுறை, எடப்பாடி பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலை.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com