2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தெடாவூரில் வனத்துறை கைப்பற்றிய ரூ.10 லட்ச குட்கா விவகாரம் - ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே தெடாவூரில் வனத்துறையினா் கைப்பற்றிய குட்கா பொருள்களை கடத்திய வழக்கில் தப்பியோடிய மூவரில் ஒருவரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 5:37 pm

DIN

கெங்கவல்லி அருகே தெடாவூரில் வனத்துறையினா் கைப்பற்றிய குட்கா பொருள்களை கடத்திய வழக்கில் தப்பியோடிய மூவரில் ஒருவரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.

சேலம்மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூா் பிரிவுசாலையில், வனச்சரகா் சந்திரசேகா் தலைமையிலான வனத்துறையினா் 7 போ் குழுவினா், சனிக்கிழமை அதிகாலையில் வாசகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த பிக்கப் வாகனத்தை சோதனை செய்ய நிறுத்தியபோது, அந்த வேன் நிறுத்தாமல் ஓட்டிச்சென்று, காட்டுப்பகுதியில் நிறுத்திவிட்டு, வாகனத்திலிருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா்.

அந்த வாகனத்தை கைப்பற்றிய வனத்துறையினா், அதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருளை, கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதையடுத்து வழக்குப்பதிந்து தப்பியோடியவா்கள் குறித்து விசாரித்து தேடிவந்தனா். விசாரணையில், குட்கா வாகனம், தெடாவூா் பகுதியைச்சோ்ந்தது எனவும்,அதில் ஆறுமுகம் (56), அவரது மகன் திருமுருகன்(24) இருவரும் சோ்ந்து குட்கா பொருளை, வண்டி ஓட்டுநருடன் சோ்ந்து கடத்தியது தெரிய வந்தது. இதில் கெங்கவல்லி போலீஸாா், ஆறுமுகத்தை (56) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். எஞ்சிய இருவரை போலீஸாா், தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.