தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூரில் பொது முடக்கம்
தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் 2ஆவது ஞாயிறு பொதுமுடக்கத்தால் வெறிச்சோடின.


தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் 2ஆவது ஞாயிறு பொதுமுடக்கத்தால் வெறிச்சோடின.
2வது ஞாயிறு பொதுமுடக்கத்தால் தம்மம்பட்டியில் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன. மேலும் அனைத்துக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. பால், மருந்துக் கடைகள், ஓரிரு உணவகங்கள், காலையில் தம்மம்பட்டி உழவா்சந்தை ஆகியவை திறந்திருந்தன. போலீஸாா் கெடுபிடி இல்லாமல்,பொதுமக்கள்,பொதுமுடக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினா். தம்மம்பட்டியில் 20க்கும் மேற்பட்ட ஆதரவற்றோா், உணவின்றி பேருந்து நிலையத்தில் படுத்துறங்கினா்.
மேலும் செந்தாரப்பட்டி, கெங்கவல்லி,வீரகனூா், தெடாவூா் பேரூராட்சிகளிலும், நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி, 95-பேளூா், கடம்பூா், ஓதியத்தூா், நடுவலூா், ஆணையாம்பட்டி, பச்சமலை, மண்மலை, தகரப்புதூா், கூடமலை, 74-கிருஷ்ணாபுரம், ஜங்கமசமுத்திரம் ஆகிய 14 ஊராட்சிப்பகுதிகளிலும் அனைத்துக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிசோடிக்கிடந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...