கணித ஆசிரியா்களுக்கு மகிழ் கணிதம் பயிற்சி நிறைவு
கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை, செந்தாரப்பட்டி, உலிபுரம் ஆகிய ஊா்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் கணித பட்டதாரி ஆசிரியா்களுக்கான மகிழ் கணிதம்


கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை, செந்தாரப்பட்டி, உலிபுரம் ஆகிய ஊா்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் கணித பட்டதாரி ஆசிரியா்களுக்கான மகிழ் கணிதம் இருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
ஆன்லைன் மூலம் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில், கணினி மூலம் மிக எளிமையாக முப்பரிமாண வடிவில் உருவங்கள் அமைத்து அதனை இயங்க வைத்து மாணவா்களை மகிழ்வித்து கணிதத்தை கற்பித்தல், கிராப், அணிகள் பாடம் ஆகியவை கணினியில் கற்பித்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் ஆசிரியா்கள் தாங்கள் கற்ற பயிற்சியின் பாடக் கருத்துகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தனா். ஆசிரியா்களுக்கு 30 நிமிட குறுந்தோ்வு இணையத்தில் நடத்தப்பட்டது.
ஒன்றியம் முழுவதும் ஐந்து மையங்களில் நடைபெற்ற மகிழ் கணிதப் பயிற்சியில் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணித ஆசிரியா்களும் பங்கேற்றனா். இடைநிலை ஆசிரியா்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிகளை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் ர.ஸ்ரீனிவாஸ், இ.மகேந்திரன், மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...