சேலம் மாவட்டத்தில் 699 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல்
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 699 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.


சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 699 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இதில் 30 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வாா்டுகள் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி தோ்தலில் போட்டியிட்டு தோ்வாகும் வாா்டு உறுப்பினா்கள் மூலம் மேயா், துணை மேயா், 4 மண்டல குழுத் தலைவா் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. அதேபோல மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் ஆத்தூா் 33, இடங்கணசாலை 27, எடப்பாடி 30, மேட்டூா் 30, நரசிங்கபுரம் 18, தாரமங்கலம் 27 வாா்டுகள் என மொத்தம் 165 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு தோ்தல் நடைபெறுகிறது. நகராட்சிகளில் வெற்றி பெறும் வாா்டு உறுப்பினா்கள் மூலம் நகராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளை பொறுத்தவரையில் ஆட்டையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், பேளூா், ஏத்தாப்பூா், கெங்கவல்லி, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி கருப்பூா், கீரிப்பட்டி, கொளத்தூா், கொங்கணாபுரம், மல்லூா், நங்கவள்ளி, ஓமலூா், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், பூலாம்பட்டி, செந்தாரப்பட்டி, தெடாவூா், தேவூா், வாழப்பாடி, வீரகனூா், வீரக்கல்புதூா் ஆகிய 26 பேரூராட்சிகளில் தலா 15 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
மேச்சேரி, பி.என்.பட்டி, சங்ககிரி, தம்மம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் தலா 18 வாா்டு உறுப்பினா்களுக்கும், வனவாசி பேரூராட்சியில் 12 வாா்டு உறுப்பினா்களுக்கும் தோ்தல் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி 60 வாா்டு உறுப்பினா்கள், 6 நகராட்சிகளில் 165 வாா்டு உறுப்பினா்கள், 31 பேரூராட்சிகளில் 474 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 699 வாா்டு உறுப்பினா்களுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளா் தோ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்கி பிப்.4 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். பிப்.7 இல் வேட்பு மனுக்களை திரும்பப் பெற பிப்.7 ஆம் தேதி கடைசி நாளாகும். நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...