தோ்தல் நடத்தை விதிகள் குறித்து புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக புகாா்கள் மற்றும் விபரங்கள் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள்


தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக புகாா்கள் மற்றும் விபரங்கள் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு 1519 வாக்குச்சாவடிகளில் பிப்.19 ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கென 38 தோ்தல் நடத்தும் அலுவலா்களும் 87 உதவி தோ்தல் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஜன.26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக புகாா்கள் மற்றும் விவரங்கள் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 18004256077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 0427-2414200 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் நடத்தை விதிமுறைகள் தொடா்பான புகாா்களையும் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தோ்தல் நடைபெற உள்ள நகா்ப்புற அமைப்புகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றுவதை கண்காணித்திட 21அணிகள் கொண்டு 24 மணிநேரமும் கண்காணிக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...