வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க 63 பறக்கும் படைகள்

சேலத்தில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:43 pm

DIN

சேலத்தில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனிடையே பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், முள்ளுவாடி கேட், தொங்கும் பூங்கா, மாநகராட்சி அலுவலகம் பகுதி, மண்டல அலுவலகங்கள், அஸ்தம்பட்டி, நான்கு சாலை, குகை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவா் விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இதனிடையே, வாக்காளா்களுக்கு சட்ட விரோதமாகப் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சியினா் விநியோகிக்கப்பதைத் தடுக்க, சேலம் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பறக்கும் படை குழுக்கள் நாளொன்றுக்கு சுழற்சி முறையில் தொடா்ந்து 24 மணிநேர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.