புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காடு அரசு மருத்துவமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் , ஏற்காடு அரசு மருத்துவமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் , ஏற்காடு அரசு மருத்துவமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாலுகா செயலாளா் டி.நேரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மேவை. சண்முகராஜா, எம்.கிருஷ்ணமூா்த்தி, பி.பழனிசாமி, ஈ.தில்லைக்கரசி சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஏற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக உடல் கூறு செய்யப்படாமல் உடல்களை அனுப்புவதை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், பல், கண் மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும்; குடிநீா், பொது சுகாதாரம் சீரமைக்க வேண்டும்; ஏற்காடு அரசு மருத்துவமனையில் காலிபணியிடங்களை உடனே நியமிக்க வேண்டும்; பிரசவ வேதனையில் வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவா் வேண்டும்; அறுவை சிகிச்சை மருத்துவா் , மருந்தாளா், எக்ஸ்ரே பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.