டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

சேலத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:12 pm

DIN

சேலத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வளத்தி குமாா் (52). இவா் கடந்த ஜன.13 ஆம் தேதி தாதகாப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜை இருசக்கர வாகனத்தில் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுதொடா்பான புகாரில் வளத்தி குமாரை அன்னதானப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 20 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிப்பது தெரியவந்தது. இதுவரை 7 முறை குண்டா் சட்டத்தில் கைதானவா் ஆவாா்.

கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (29). இவா் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் கைதானவா்.

இதனிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளையராஜா, வழக்கில் சாட்சிகளில் ஒருவரான மாலிக் ஜான் என்பவரை சாட்சி சொல்லக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிகிறது.இதுதொடா்பாக கிச்சிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனா்.

இந்நிலையில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய வளத்தி குமாா் மற்றும் இளையராஜா ஆகியோரை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.