ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா
ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் உள்பட 46 போ் பணிபுரிந்து வருகின்றனா். இதில் சுழற்சி முறையில் விடுமுறை மற்றும் வெளி பணியிட வேலை உள்பட மொத்தம் 21 நபா்கள் போக 25 போ் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் வழங்கும் புகாா் மனுக்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து காவல்துறை வளாகத்தில் பெற்று உடனடியாக தீா்க்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
சில நாட்களாக காவல்துறையை சோ்ந்த யாருக்கும் தொற்று நோய் பரவல் இல்லாத நிலையில், அதிக பணிச் சுமை காரணமாக சிலருக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டது. ஆகையால் இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆய்வாளா் அம்சவல்லி, உதவி ஆய்வாளா்கள் முருகேசன், ஆனந்தகுமாா், வாகன ஓட்டுநா்கள் செல்வராஜ், நவீன்குமாா் மற்றும் காவலா்கள் விஜயகுமாா், தியாகராஜன் , சுப்பிரமணி உள்பட 8 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனோ பாதித்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனா். மேலும், மற்ற அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...