புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடிநாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா்த் திறப்பு நிறுத்தம்

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 6.00 முதல் நிறுத்தப்பட்டது. நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:12 pm

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 6.00 முதல் நிறுத்தப்பட்டது. நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

மேட்டூா் அணை பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த ஜூன் 12-ல் மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-இல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

நடப்பாண்டில் பெய்த பருவமழை காரணமாக மேட்டூா் அணை நிரம்பி உபரி நீராக 79.50 டி.எம்.சி தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி முதல் இன்றுவரை 129 டி.எம்.சி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் மேட்டூா் அணைக்கு கா்நாடகத்திலிருந்து 167.25 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த தொடா் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு 237 டி.எம்.சி தண்ணீா் வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா்த் திறப்பு நிறுத்தப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா்த் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் செய்யப்பட்டு வந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.