ஓமலூர் அருகே சிமெண்ட் லாரி விபத்து: துரிதமாக செயல்பட்டு ஓட்டுநரை மீட்ட மக்கள்

ஓமலூர் அருகே சிமெண்ட் லாரி விபத்தில், பொதுமக்களின் துரித நடவடிக்கையால் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே சிமெண்ட் லாரி விபத்து: துரிதமாக செயல்பட்டு ஓட்டுநரை மீட்ட மக்கள்

சேலம்: ஓமலூர் அருகே சிமெண்ட் லாரி விபத்தில், பொதுமக்களின் துரித நடவடிக்கையால் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி பகுதியை சேர்ந்த பொம்மநாயகர் மகன் முருகவேல் என்பவர் டிராக்டரில் சிமென்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கருப்பூரை நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது கருப்பூர் மேம்பாலம் அருகே தனியார் கோகுல் டைல்ஸ் கம்பனி அருகில் வேகத்தடையை அறியாமல் சென்றவர் திடீரென டிராக்டர் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.

அப்பொழுது, பிரேக் பழுதடைந்ததுள்ளது தெரிய வந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சுமார் 20 அடி ஓடை பள்ளத்தில் தலைகுப்புற விழுந்ததில், ஓட்டுநர் முருகவேல் மீது சிமென்ட் மூட்டைகள் விழுந்துள்ளது. இதையடுத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் தப்பித்து விட்டார் என கூறிகொன்டிருக்கும் போது, ஓட்டுநரின் துணி ஒருவருக்கு தென்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக துரிதமாக பொதுமக்கள் ஒன்றிணைந்து, சிமென்ட் மூட்டைகளை அகற்றி, ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அறிந்த கருப்பூர் காவல் துறையினர் டிராக்டர் வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் ஓட்டுநர் சிமென்ட் மூட்டைக்கு அடியில் மாட்டி கொண்டிருந்த நிலையில், பொதுமக்களின் துரித நடவடிக்கையால் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com