தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டம்

சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில் சேலம், நெய்காரப்பட்டி, ஆத்தூா், தாரமங்கலம் என 4 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேலம், ராஜாஜி சாலையில் உள்ள சாரதா பாலமந்திா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் புதன்கிழமை காலை வந்தனா். பின்னா், தங்களுக்கு விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை எனக்கூறி விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக ஆசிரியா்கள் கூறுகையில், வழக்கமாக பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், நிகழாண்டில் அம்முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியா்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

ஏற்கெனவே இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துள்ளோம் என்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலா் உதயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆசிரியா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியத்துக்கு பின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. ஆசிரியா்களின் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி சுமாா் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதேபோல, ஆத்தூா், நெய்காரப்பட்டி, தாரமங்கலத்தில் உள்ள மையங்களிலும் ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.