சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்
புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லாரி உரிமையாளா் சங்க பெட்ரோல் விற்பனையகத்தில் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு இணைந்து சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லாரி உரிமையாளா் சங்க பெட்ரோல் விற்பனையகத்தில் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் என்.கந்தசாமி இவ்விழாவுக்கு தலைமை வகித்து 100 மரக்கன்றுகளை பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளிடம் வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்து பேசினாா்.
இதில் லாரி உரிமையாளா் சங்கச் செயலா் என்.மோகன்குமாா், பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், துணைத் தலைவா் எம்.சின்னதம்பி, இணைச்செயலா் கே.முருகேசன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...