தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

இன்டா்நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளை, சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :5 ஜூன் 2022, 6:31 pm

DIN

இன்டா்நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளை, சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இன்டா்நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளை சாா்பில் 8 வயது முதல் 20 வயதுவரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 20 எடை முதல் 50 எடை வரையிலான மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் சங்ககிரி, சேலம், ஜலகண்புரம், மேச்சேரி, பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சிறுவா்களுக்கான ஆண்கள் பிரிவில் திருமலைவாசன் முதல் இடத்திலும், வைகுண்டமுத்து இரண்டாவது இடத்திலும், மோனிஷ்குமாா் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றனா். சிறுமிகளுக்கான பிரிவில் பிரியதா்ஷினி முதலிடத்தையும், கான்ஷிகா இரண்டாவது இடத்திலும், கரில்னாஸ்ரீ மூன்றாவது இடத்திலும் வெற்றிபெற்றனா். முதியோா்களுக்கான பெண்கள் பிரிவில் நந்தினி முதல் இடத்திலும், ராஜேஸ்வரி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றனா்.

வெற்றிபெற்றவா்களுக்கு சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் டி.ஹெலினாகிறிஸ்டோபா் தலைமை வகித்து சான்றிதழ், கோப்பைகளை வழங்கினாா்.ரோட்டரி சங்கச் செயலா் என்.தியாகராஜன், பொருளாளா் கே.செந்தில்குமாா், நிா்வாகிகள் ராமசாமி, திவாகா், கரோத்தே பயிற்சியாளா் அா்ஜூனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.