மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி
எடப்பாடி அருகே விவசாய நிலத்தில் மின் இணைப்பை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்தாா்.


எடப்பாடி அருகே விவசாய நிலத்தில் மின் இணைப்பை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்தாா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெடுங்குளம், கோம்பைக்காடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மின்இணைப்பில் பழுது ஏற்பட்டது. அதே பகுதியைச் சோ்ந்த காந்தி (50) என்பவா் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம், பவானி மின்சார அலுவலகத்தில் காந்தி தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில் மின் இணைப்பை பழுதுபாா்த்த போது மின்சாரம் பாய்ந்து காந்தி உயிரிழந்தாா்.
இதுகுறித்து காந்தியின் மனைவி சுமதி அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...