மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மூக்கின் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்

மூக்கின் துவாரம் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சேலத்தைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் சாதனை படைத்துள்ளார்.

News image
மூக்கின் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பும் கராத்தே மாஸ்டர் நடராஜ்.
Updated On :19 ஜூன் 2022, 1:18 pm

DIN

மூக்கின் துவாரம் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சேலத்தைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் கின்னஸ் சாதனைகள் உள்பட 97 வகையான சாதனை நிகழ்வுகளை நிகழ்த்திய இவர் தனது 98வது சாதனையை இன்றைய தினம் நிறைவு செய்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் 3 டியூபுகளில் காற்று நிரப்பி தனது சாதனையை அறங்கேற்றினார். 

நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது. ஏற்கனவே தொடர் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் இந்த சாதனை எளிதாக இருந்ததாகவும், மற்றவர்கள் முறையான பயிற்சி இல்லாமல் முயற்சித்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் எச்சரித்த நடராஜ், ஏற்கனவே யோகாதினம் குறித்து பெரும்பாலானோரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மனிதமும் தனது வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் மூச்சு பயிற்சி முக்கியம். எனவே, அனைவரும் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். நடராஜின் சாதனையை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.