வேளாண் தொழில்நுட்ப விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூரில் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்ற


அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூரில் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அயோத்தியாபட்டணம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் மண்வள பாதுகாப்பு குறித்து குப்பனூரில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.
அயோத்தியாபட்டணம் வட்டாரத்துக்கு உள்பட்ட குப்பனூா், ஆச்சாங்குட்டப்பட்டி, பூவனூா், சுக்கம்பட்டி, வலசையூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு மண் வள பாதுகாப்பு குறித்து முக்கிய கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு அயோத்தியாபட்டணம் வட்டார அட்மா குழு தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சரஸ்வதி வரவேற்றாா். வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு மைய உதவி இயக்குநா் கவிதா, சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குநா் ஜெகதாம்பாள் ஆகியோா் வேளாண்மை வளா்ச்சி குறித்து பேசினா்.
மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை அலுவலா் பாரதி விளக்கினாா். வேளாண் பொறியியல் துறை, கால்நடை மருத்துவ துறை, வனத்துறை, வேளாண்மை தரக் கட்டுப்பாடு துறை, பட்டு வளா்ச்சித் துறை, வேளாண் விற்பனை துறை உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு விவசாயம் சாா்ந்த அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசினா். இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...