சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியாா் மகளிா் கல்லூரியில் அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியாா் மகளிா் கல்லூரியில் அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கலை அறிவியல் கல்லூரியில் ஆத்தூா் வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி பொருளாளா் வீரமணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பிரகாஷ் வரவேற்றாா்.
ஆத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ரகுபதி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வாழப்பாடி மணிவண்ணன், ஆத்தூா் செந்தில்குமாா் ஆகியோா் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா். சாலை விதிமுறைகள் குறித்த மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா். நிறைவாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை சத்யா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...