சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எடப்பாடி அருகே புளி சந்தை தொடங்கியது

சுமார் 15 கிலோ எடை உள்ள ஒரு கூடை புளியானது. ரூ.900 முதல் 1000 வரை விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News image
எடப்பாடி அருகே புளி சந்தை தொடங்கியது
Updated On :20 மார்ச் 2022, 7:40 am

DIN

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சமையல் புளி வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூலாம்பட்டி பகுதியில் புளி சந்தை நடைபெறுவது வழக்கம். 

சந்தைக்கு அருகிலுள்ள ஈரோடு மாவட்டம் மற்றும் சேலம் மாவட்ட பாலமலை வனப்பகுதியில் உள்ள ஈச்சங்காடு, சிங்காரத்தோப்பு, நடுவட்டம்,நாகம்பதி உள்ளிட்ட மலை கிராமங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மலைவாழ் பழங்குடி மக்கள் மலைப்பகுதியில் சேமித்த புளிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். 

மலைப்பாங்கான பகுதியில் விளையும் இவ்வகை புளியானது நல்ல சுவையுடனும் சதைப்பற்றுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்கள், மொத்தவிற்பனையாளர்கள், மளிகை கடை உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் என திரளானோர் சந்தைக்கு வருகை தந்து சமையல் புளியினை  வாங்கிச் செல்கின்றனர். 

சுமார் 15 கிலோ எடை உள்ள ஒரு கூடை புளியானது. ரூ.900 முதல் 1000 வரை விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த மாதம்வரை புளி சந்தை தொடர்ந்து நடைபெறும் என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.