வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக-6, அதிமுக-6, சுயேச்சைகள்-3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் கடந்த மார்ச் 4 ந்தேதி அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக வார்டு உறுப்பினர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, சனிக்கிழமை பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தலைவர் தேர்தலில் திமுக சார்பில், ஜெயசெல்வி பாலாஜியும் அதிமுக சார்பில் பரமேஸ்வரி சந்துருவும் போட்டியிட்டனர்.
இதில் திமுகவை சேர்ந்த ஜெயசெல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பரமேஸ்வரி 7 வாக்குகள் பெற்றார்.
பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயசெல்விக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பேளூர் நகர திமுக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



