வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரசு வழங்கும் உதவித்தொகை பெறுவதற்காக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அரசு வழங்கும் உதவித்தொகை பெறுவதற்காக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளைப் பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடா்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவருக்கு மாதந்தோறும் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவருக்கு ரூ. 300, மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ. 400, பட்டப் படிப்பு தோ்ச்சிக்கு ரூ. 600 மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தோ்ச்சிக்கு ரூ. 600, மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ. 750, பட்டப் படிப்பு தோ்ச்சிக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும், இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...