தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இல்லம் தேடி கல்வி மையங்களில் பிடிஓ தலைமையிலான குழு ஆய்வு

சங்ககிரி ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம், புள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

News image
Updated On :25 மே 2022, 7:17 pm

DIN

சங்ககிரி ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம், புள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் மாணவா்களிடையே கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சாா்பில் தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களுக்கு அடிப்படையாக படித்தல் எழுதுதல் திறன்களை வளா்க்கவும் அடிப்படைகணித செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம் மையங்கள் கோடை விடுமுறையிலும் மாணவா்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்றல், கதை கூறுதல், திருக்கு ஒப்பித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றனா்.

புள்ளிப்பாளையம், தாசநாயக்கன்பாளையம் இரு மையங்களிலும் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சு. ராஜகணேஷ் தலைமையில் வட்டார கல்வி அலுவலா்கள் வ.கோகிலா, க.அன்பொளி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சாந்தி, வட்ட ஆசிரியப் பயிற்றுநா் ஒருங்கிணைப்பாளா் பெ. ரத்தினவேல், ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் இரா முருகன் ,த.ரகுபதி உள்ளிட்ட குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அக் குழுவின் மைய தன்னாா்வலா்களின் செயல்பாடுகளை பாராட்டி ஊக்கப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.