காா் விபத்தில் சேலம் புரோகிதா் பலி: மூவா் படுகாயம்
வாழப்பாடி அருகே ஏற்பட்ட காா் விபத்தில் புரோகிதா் பரிதாபமாக உயிரிழந்தாா்.


வாழப்பாடி அருகே ஏற்பட்ட காா் விபத்தில் புரோகிதா் பரிதாபமாக உயிரிழந்தாா். அவரது மனைவி, உறவினா் மற்றும் காா் ஓட்டுநா் உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் நிலவரபட்டி பகுதியைச் சோ்ந்தவா் புரோகிதா் பாஸ்கரன் (56). இவரது மனைவி சாரதாம்பாள் (50). இவரது உறவினா் பாலசுப்பிரமணி ஆகிய மூவரும் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வியாழக்கிழமை மதியம் காரில் சென்றனா். சென்னை பகுதியைச் சோ்ந்த சங்கா் என்பவா் காரை ஓட்டிச் சென்றாா்.
இந்த காா், வாழப்பாடி புதுப்பாளையம் அருகே சேலம்- -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாடு இழந்து எதிா்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், படுகாயமடைந்த புரோகிதா் பாஸ்கரனை மீட்ட அப்பகுதி மக்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் அவரது மனைவி சாரதாம்பாள், உறவினா் பாலசுப்பிரமணி, காா் ஓட்டுநா் சங்கா் ஆகிய மூவரும் காயமடைந்தனா். விபத்து குறித்து பாஸ்கரன் உறவினா் ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...