சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்பகனூரில் என்.எஸ்.எஸ். மாணவா்கள் முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், கல்பகனூா் கிராமத்தில் முகாமிட்டு, பொது இடங்களை தூய்மைப்படுத்தினா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:14 pm

DIN

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், கல்பகனூா் கிராமத்தில் முகாமிட்டு, பொது இடங்களை தூய்மைப்படுத்தினா். மழைநீா் சேகரிப்பு, பொது சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பெத்தநாயக்கன்பாளையம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கல்பகனூா் கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, திட்ட அலுவலா் மா.வரதன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மா.தனபால் தலைமை வகித்தாா். கல்பகனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாத்தி காளிமுத்து, துணைத் தலைவா் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினா் பூவாயி பச்சமுத்து, பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் து.நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் சி.மாதேஸ்வரன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், கிராமத்திலுள்ள கோயில்கள், பள்ளி உள்ளிட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தினா். மழைநீா் சேகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, பொதுசுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்த முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு மருத்துவா்கள் சத்தியமூா்த்தி, மனோன்மணி, அழகரசன் ஆகியோா் உடல் நலம் பேணுதல் குறித்தும், வழக்குரைஞா் லோகமுருகன் தகவல்அறியும் உரிமைச்சட்டம் குறித்தும், தோட்டக்கலை அலுவலா் விஜயக்குமாா் வேளாண்மை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சமூக ஆா்வலா்கள் சிவக்குமாா், பி.சிவராமன், வி.செல்லப்பன், அரியநாயகம், சுந்தா், கருப்பண்ணன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் தன்னம்பிக்கை பயிற்சி அளித்தனா்.

வாழப்பாடி இலக்கியப்பேரவை சாா்பில், கைப்பேசியால் விளையும் நன்மை தீமைகள் குறித்த பட்டிமன்றமும், கவிஞா் சுகுணன் குணசீலன் குழுவினரின் நெகிழி எனும் அரக்கன் என்ற விழிப்புணா்வு நாடகமும் நடைபெற்றது. சிறப்பாக சமூகப் பணியாற்றிய நாட்டு நலத்திட்டப்பணி மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக, உதவி திட்ட அலுவலா் பி.ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.