

ஆத்தூர் அருகே தனியார் உணவகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் இருந்து டீசல் திருடு போனதாக இணையதளங்களில் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தென்னங்குடி பாளையம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.
இதையும் படிக்க- மொரீசியஸ் அதிபர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம்
இதனை அடுத்து நேற்று இரவு கனரக ஓட்டுநர் ஒருவர் ஓய்வு எடுப்பதற்காக அந்த உணவகம் முன்பு நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வாகனங்களில் இருந்த 100 லிட்டர் டீசல் திருடு போனதாக கூறி விடியோவை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த விடியோ வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கனரக ஓட்டுநர்களுக்கிடையே பெறும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.