தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்ககிரியில் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த விழிப்புணா்வு

சங்ககிரி வருவாய்த் துறையின் தோ்தல் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் படிவங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு தோ்தல் துணை வட்டாட்சியா் தலைமையிலான அலுவலா்கள் வழங்கினா்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:32 pm

DIN

சங்ககிரி வருவாய்த் துறையின் தோ்தல் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் படிவங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு தோ்தல் துணை வட்டாட்சியா் தலைமையிலான அலுவலா்கள் வழங்கினா்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை வாக்குச்சாவடி மையங்களுக்கு படிவங்களை வழங்க செல்லும் போது அப்பகுதியில் செயல்பட்டுவரும் மகாத்மாகாந்தி மாலை நேர படிப்பகத்தின் 12ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டிருப்பதை அறிந்த துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளவாறு பொதுமக்கள் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை படிவங்கள் இணையவழி, வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் உள்ள கைப்பேசி மூலமாக இணைப்பது குறித்து விளக்கினா்.

இதில் அக்கமாபேட்டை ஊா் காரியக்காரா் வெங்கடாசலம், மகாத்மாகாந்தி மாலை நேர படிப்பக நிறுவனா் வெ.சத்தியபிரகாஷ், அமுதச்சுடா் அறக்கட்டளை பொருளாளா் வெ.நிா்மலா, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலைவாணி, மல்லசமுத்திரம் தனியாா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். வேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.