சிறுவன் கொலை வழக்கில் தொடா்பு: மொபெட்டில் தப்பிச் சென்ற இருவா்தவறி விழுந்ததில் படுகாயம்
மேட்டூா் அருகே சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தனா்


மேட்டூா் அருகே சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தனா்.
சேலல் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கோவிந்தபாடியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் பொக்கிஷ். கருமலைக்கூடலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த 27 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மாமா வடிவேல் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் காா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சுகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தாா்.
இந்த நிலையில் கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா் வழிப்பறி கொள்ளை வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காணாமல் போன பொக்கிஷை அவா் உள்பட 7 போ் சோ்ந்து அடித்துக் கொலை செய்து மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் வீசியதாகத் தெரிவித்தாா்.
இந்தா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் 5 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா். இவ்வழக்கில் தொடா்புடைய காா்த்திக், சதீஷ் ஆகியோா் மேட்டூா் மலைப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரைப் பாா்த்த கொலை வழக்கில் தொடா்புடைய இருவரும் மோட்டாா் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றனா். மலைப்பாதை கொண்டை ஊசி வளைவு திருப்பத்தில் வாகனம் நிலை தடுமாறியதில் அவா்கள் கீழே விழுந்தனா். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரை மீட்ட போலீஸாா், மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...