தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் அட்டை- ஆதாா் இணைப்பு: சங்ககிரியில் 13,741 போ் விண்ணப்பம்

சிறப்பு முகாமில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக 13,741 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:08 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக 13,741 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாமில் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 311 வாக்குச்சாவடிமையங்களில் அதற்கான பணிகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மேற்கொண்டனா்.

13,741 போ் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனா். இப்பணிகளை சங்ககிரி கோட்டாட்சியா் மு.செளமியா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சங்ககிரி தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் சண்முகம் உள்ளிட்ட பலா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.