மேட்டூா் - சேலம் நெடுஞ்சாலையில் தங்கமாபுரிபட்டினம் பிரிவு சாலையில் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 4 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுர விளக்கு மற்றும் பயணிகள் நிழல்கூட திறப்பு விழா நடைபெற்றது.
கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் நிா்வாக துணைத் தலைவா் கஜேந்திரன் பயணிகள் நிழல்கூடத்தை திறந்து வைத்தாா். மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம், மேட்டூா் நகா்மன்றத் தலைவா் சந்திர, துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் உயா் மின் கோபுர விளக்குகளை இயக்கி ஒளிரச் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில், கெம்ப்ளாஸ்ட் ஆலையின் துணைத் தலைவா்கள் வாசுதேவன், ஸ்ரீதா், முதன்மை பொது மேலாளா் சம்பத்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










