கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மானாமதுரை எல்லை பிடாரி அம்மன் கோயில் உற்சவ விழா

மானாமதுரை ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு உற்சவ விழாவை முன்னிட்டு நேற்றிரவு சட்டி சோறு சுமந்து பெண்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

News image
மானாமதுரையில் செவ்வாய் சாட்டு உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி அருள்பாலித்த எல்லை பிடாரி அம்மன்
Updated On :28 செப்டம்பர் 2022, 12:12 pm

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு உற்சவ விழாவை முன்னிட்டு நேற்றிரவு சட்டி சோறு சுமந்து பெண்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

மானாமதுரை கஸ்பா கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் எல்லை  பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற சட்டி சோறு ஊர்வலத்தை முன்னிட்டு மானாமதுரை  கஸ்பா கிராமத்தின் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்தனர். அதன் பின்னர் இந்த உணவுகளை மண்ணால் செய்யப்பட்ட சட்டிகளில்  வைத்து சுட்டிகளை அடுக்கி அதில் விளக்கேற்றி வைத்து பெண்கள் இந்த சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

செவ்வாய் சாட்டு உற்சவத்தை முன்னிட்டு சட்டி சோறு ஊர்வலம் நடைபெற்றது.

செவ்வாய் சாட்டு உற்சவத்தை முன்னிட்டு சட்டி சோறு ஊர்வலம் நடைபெற்றது.

வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் வந்த இந்த சட்டி சோறு ஊர்வலம்,  பிடாரி அம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு பெண்கள் சட்டி சோறு படையலை எல்லை பிடாரி அம்மனுக்கு படைத்து கிடா வெட்டி பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.